வனவிலங்குகள் மனிதர்களைத் தாக்குவதற்கு யார் காரணம்? இரு மாநில கள ஆய்வு
சாதி, இனம், மதம், மொழி, நிறம் போன்ற பாகுபாடுகளை பெரிதாக்கி மோதலை ஏற்படுத்தும் இன்றைய முதலாளித்துவம் மக்களின் வாழ்வாதாரங்களை வளர்ச்சி மேம்பாடு என்ற போர்வையில் சுரண்டி அழித்து வருகின்றன.
இதன் ஒரு பகுதிதான் சட்டவிரோத புலிகள் காப்பகம், ஆக்கிரமிப்பு அகற்றல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நகரமயமாக்கல் போன்றவையாகும். இச்சூழ்நிலையில் நிலம், நீர், காடு, கடல் போன்ற இயற்கை வளங்களை மக்களின் ஆளுகையின் கீழ் கொண்டு வருவதோடு அறிவியல் பூர்வமான செயல்பாடுகள் மட்டும் தான் மனித-வனவிலங்கு மோதலை தடுக்க முடியும். இந்த நோக்கத்தோடு “வனவிலங்குகள் மனிதர்களைத் தாக்குவதற்கு யார் காரணம்” என்ற ஆய்வு நூலினை வெளியிடுகின்றோம்.
நிலம், நீர், காடு, கடல், இயற்கை வளங்கள் போன்ற அடிப்படை வாழ்வாதாரங்கள் பறிப்புக்கு எதிராகப் போராடும் அனைத்து தரப்பு மக்களுக்கும் எமது வனவிலங்குகள் மனிதர்களைத் தாக்குவதற்கு யார் காரணம்? இரு மாநில கள ஆய்வு புத்தகம் பயன்படும் என நம்புகிறோம்.
Reviews
There are no reviews yet.