ஏழாவது ஊழி
₹250.00
மனிதக் குரங்குகளையும், குரங்கு மனிதர்களையும் அடையாளம் காட்டும் கட்டுரை மிகவும் ரசனையுடனும், ஆழ்ந்த அறிவுடனும் எழுதப்பட்டுள்ளது.
- Description
- Reviews (0)
Description
ஏழாவது ஊழி நூலை பற்றி
சூழலியல் வெறுமனே கல்வி அல்ல, அது இயற்கை. இரத்தமும் சதையும் என்பார்களே; அதுபோல இயற்கையில் தோய்ந்துஅதன் அங்கமாகவே அனுபவித்து வாழுகின்ற வாழ்க்கைதான் சூழலியல்” என்று சொல்லும் பொ. ஐங்கரநேசன் இந்நூலில், புவிக்கோளை அச்சுறுத்திவரும் பல்வேறு சூழலியற் பிரச்சினைகளை விரிவாக விளக்கியிருக்கிறார்.
இயற்கைச் சூழல் அனுபவித்துவரும் அனைத்து துயரங்களிற்கும் ஒற்றை இனமான மனிதனையே காரணம் சுட்டும் இவர், பேரழிவில் இருந்து தப்புவதற்கு மனிதன் புவியின் மீது மேலாண்மை செய்வதை விடுத்து கூட்டாண்மை உறவிற்குத் திரும்பவேண்டும் என வலியுறுத்துகிறார்.
நாற்பத்தோரு கட்டுரைகள் அடங்கிய இந்நூலின் பேசுபொருள் புழு, பூச்சியில் தொடங்கிப் புவிவெப்பமாதல் வரைக்கும் விரிவானது.
ஏழாவது ஊழி நூல் புவி வெப்பம் குறித்த கட்டுரையுடன் ஆரம்பமாகும் நூல், அடுத்த அத்தியாயத்திலேயே அதற்கு காரணமான அமெரிக்காவை விமர்சனம் செய்கிறது. சூழல் என்பது சமூகம் மட்டுமே சார்ந்த அம்சம் அல்ல என்பதை உணர்த்தும் நோக்கிலும் கட்டுரைகள் உள்ளன. நவீன சமையலறையில் உள்ள பாத்திரங்களே நஞ்சாகும் அவலம், நாகரீக உடையான ஜீன்ஸ் சூழலுக்கு எவ்வாறு எதிரானது, செல்லிட பேசிகள் விளைவிக்கும் அபாயம், கோக்-பெப்சி போன்ற பூச்சி மருந்துகள், பிளாஸ்டிக், அஸ்பெஸ்டாஸ் போன்றவை குறித்து அபாய மணி அடித்து கட்டுரைகள் எச்சரிக்கை செய்கின்றன.
சிலந்தி, வண்ணத்துப்பூச்சி, தவளை, கடற்குதிரை ஆகியவை குறித்த கட்டுரைகள் நமது வாழ்நாளிலேயே பல உயிரினங்கள் அழிவை சந்திக்கும் அவலத்தை சொல்கின்றன. இவற்றின் அழிவு, என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கையை கூறவும் தவறவில்லை.
மனிதக் குரங்குகளையும், குரங்கு மனிதர்களையும் அடையாளம் காட்டும் கட்டுரை மிகவும் ரசனையுடனும், ஆழ்ந்த அறிவுடனும் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக சிம்பன்சி, போனபோ வகை குரங்குகளின் பாலியல் வாழ்வை ஒப்பிடுவதன் மூலம் மானுடவியலின் துவக்கத்துக்கான அடிப்படை சுட்டிக்காட்டப்படுகிறது.
ஓரின, ஈரின சேர்க்கை மட்டுமல்லாமல் சுயஇன்பத்திலும் போனபோ வகை குரங்குகள் ஈடுபடுகின்றன என்பது பலருக்கும் புதிய தகவலாக அமையும். ஆனால் இந்த குரங்குகளுக்கு, வேட்டைக்காரர்கள் முதல் நவீன தொழில் நுட்பத்தின் சோதனைச்சாலைகள் வரை ஏற்படும் ஆபத்துகளை விவரிக்கும் போது நவீன உலகின்மீது ஒரு சிறு கோபம் கிளர்ந்தெழுகிறது.
Reviews
There are no reviews yet.