அழியும் பேருயிர் யானைகள் நூல் குறிப்பு
‘அழியும் பேருயிர் யானைகள்’ எனும் இந்நூலை இயற்கை வரலாறு அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.
இந்நூலை ச.முகம்மது அலி, க.யோகானந்த் ஆகியோர் கூட்டாக எழுதியுள்ளனர்.
மிகப் பெரிய பாலூட்டி உயிரினமான யானைகள் அழிவது குறித்தும் காடுகள் அழிவது குறித்தும் மிகுந்த அக்கறையோடு எழுதப்பட்ட சூழலியல் நூலாகும் இது.
காட்டுயிர், இயற்கை ஆகியன குறித்து பல ஆண்டுகளாக நூலாசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாகும் இந்நூல்.
இதுவரை இந்நூல் இரு பதிப்புகளைக் கண்டுள்ளது. முதல் பதிப்பு 2004ஆம் ஆண்டிலும்,இரண்டாம் பதிப்பு 2009ஆம் ஆண்டிலும் வெளிவந்துள்ளது.
இவ்விரு பதிப்புகளுக்கும் இடையிலான அய்ந்து ஆண்டுகளில் தமிழகத்தில் 500 யானைகளும், இந்தியாவில் 5000 யானைகளும் அழிந்து போய்விட்டதாக ஆசிரியர்கள் வருத்தத்தோடு குறிப்பிடுகிறார்கள்.
தங்களுடைய முப்பது ஆண்டுக்கால உழைப்பின் இறுதியில் தங்களிடம் ‘அதிருப்தியே’ நிலவுவதாக சிஃபே அமைப்பின் இரான்சாண்ட் என்பவரிடம் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்துகின்றனர்.
இயற்கையையும் காட்டுயுரியையும் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு இது.
‘அழியும் பேருயிர் யானைகள்’ இயற்கையையும் காட்டுயுரியையும் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு இது.
Reviews
There are no reviews yet.