கானமயிலைத் தொலைத்தோம்
₹20.00
தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு மேற்கு மலைத் தொடர் காடுகளின் 5 சதவீதப் பகுதியில் வாழ்ந்துவரும் ஓரிடவாழ்வி (endemic). 1970-1980களில் 2000 – 2,500 வரை இருந்த இவற்றின் எண்ணிக்கை 2008 வாக்கில் 1,800 – 2,000 ஆகக் குறைந்துவிட்டது. மலை முகடுகள், புல்வெளிகள், திறந்தவெளிகளில் வாழும் இந்த ஆடு அதிகாலையிலும், பிற்பகல் நேரத்திலும் இரை தேடும். சராசரியாக மூன்றரை ஆண்டுகளே வாழும். வாழிட அழிவும், கள்ள வேட்டையும்தான் இவற்றின் அழிவுக்கு முக்கியக் காரணம்
- Description
- Reviews (0)
Description
காணமயிலைத் தொலைத்தோம் புத்தகம் குறித்து
பாலூட்டிகளில் நான்கில் ஒன்றும், பறவைகளில் எட்டில் ஒன்றும் அழிவின் விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் முன்பு வாழ்ந்து தற்போது அழிந்துவிட்ட உயிரினங்கள் அநேகம். ‘மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற அர்ஜுனன் தபசு சிற்பத்தில் ஒரு பெண் சிங்கம் இரண்டு குட்டிகளுக்குப் பால் கொடுப்பதுபோல் இருப்பதையும், சிங்காநல்லூர், சிங்கம்புணரி போன்ற ஊர் பெயர்களையும் குறிப்பிட்டு, ஆசிய சிங்கம் தெ ன்னிந்தியாவில் இருந்தது’ என்று சூழலியல் எழுத்தாளர் சு.தியடோர் பாஸ்கரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் முன்பு வாழ்ந்து தற்போது அழிந்துவிட்ட உயிரினங்கள் பற்றிய அவரது பதிவுகள் சென்ற நூற்றாண்டின்
நடுப் பகுதி வரை தமிழகத்தில் உலவிய சிவிங்கிப்புலி (Cheetah) இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவிலும் இல்லை. இதை ஆப்பிரிக்காவில் இருந்து மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சி எடுக்கிறது (இது சிறுத்தை (leopard) அல்ல). மாயாறும் பவானி நதியும் சேரும் இடத்திலுள்ள புதர்க்காடுகளில் சிவிங்கிப்புலி இருந்த விவரம் அரசு ஆவணங்களில் பதிவாகியுள்ளது. 1876இல் மதராஸ் ராஜதானியில் 135 சிவிங்கிப்புலிகள் இருந்ததாக ஓர் ஆவணம் குறிப்பிடுகிறது. சிவிங்கியை எப்படிப் பிடிப்பது, அதை வேட்டைக்குப் பழக்கும் முறை, மருத்துவம் பார்க்கும் முறை பற்றிப படங்களுடன் விளக்கும் நூல் தஞ்சைசரஸ்வதி மகால் நூலகத்தில் இருக்கிறது.
Reviews
There are no reviews yet.