கடலம்மா பேசுறங் கண்ணு என்ற நூலைப் பற்றியக் குறிப்புகள்
கடலம்மா பேசுறங் கண்ணு எனும் நூல் தமிழகத்திலும் இந்தியாவிலும் மீனவ மக்கள் குறித்த கவனம் மிகக் குறைவாகவே இருக்கிறது.
தமிழகக் கடற்கரையெங்கும் விரவியுள்ள மீனவர்கள் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார்கள்.
மீனவ மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி இந்நூல் பேசுகிறது.
தூய தமிழ் மதிப்பீடுகளை இன்று கடலோரத்தில்தான் காண முடிகிறது.
சமைத்த உணவை ஈகையாகத் தரும் ‘அசனம்’ (அயனம்) என்னும் மதிப்பீடும், அதனைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லும் கடலோரத்தில்தான் உள்ளது.
சங்கப் பாடல்களில் நாம் காணும் இந்த ஈகையை வறீதையா அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
‘பாட்டம் பொய்க்காதிருந்தால் வேட்டம் பொய்க்காது’. மொழியில் பதிவு கண்டுள்ள கடலோர வாழ்வின் இவ்வெளிய உண்மை.
கடலோரம் சமவெளியை நோக்கி உரையாடியதன் தடயம்.
ஆனால், இந்த உரையாடல் ஒரு காலகட்டத்தில் முற்றிலும் அறுந்துபோய்விட்டது.
வறீதையாவின் இப்பதிவு, சமவெளியை நோக்கிய கடலோரத்தின்.
சமவெளி மனிதர்கள் இப்போது உரையாட வேண்டும் இக்கட்டுரைகளை வாசிப்பதன் வழி.
Reviews
There are no reviews yet.