இலங்கைப் பட்சிகள் நூல் பற்றிய குறிப்புகள்
உலகிலேயே மிகவேகமாக வளர்ந்து வரும் பொழுதுபோக்கு பறவைகளை அவதானித்தல். இதன் சிறப்பு என்னவென்றால், பறவைகளை கவனிக்க ஆரம்பிப்பவர்களின் ஆர்வம் சீக்கிரமே காட்டுயிர் பேணல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என விரிவடைந்து மக்கள் நலனில் நிலை கொள்வதுதான்.
இன்று புகழ்பெற்று விளங்கும் பல சூழலியலாளர்கள் பைனாகுலருடன் தான் ஆரம்பித்தார்கள். புள்ளினங்கள் மேல் பிடிப்பு ஏற்படுபவர்களுக்கு முதலில் தேவைப்படுவது தாம் பார்க்கும் பறவையை அடையாளம் காண ஒரு கையேடு. முனைவர். கஜவதனி இலங்கை பறவைகளைப்பற்றி எழுதியிருக்கும் இந்த நூல் முதல் சில பக்கங்களிலேயே என்னை வெகுவாக ஈர்த்தது. இது கையேடு மட்டுமல்ல. இலங்கைப் பறவையியலுக்கு ஒரு சிறந்த முழுமையான அறிமுகம். பட்சிகளைப்பற்றி சொல்ல வந்த அவர், இலங்கைத்தீவின் புவியியல் கூறுகளை பற்றி முதலில் எழுதுகின்றார். எப்படி ஒரு தீவில் தனித்துவமான பறவைகள் உருவாகின்றன என்பதை விவரிக்கின்றார்..
மலைகள், ஆறுகள், மழைக்காடுகள், புதர்க்காடுகள், அலையாத்திக்காடுகள், சதுப்பு நிலங்கள் என பல புவியியல் அம்சங்களைக்கொண்ட இலங்கைத்தீவு எண்ணற்ற புள்ளினங்களுக்கு வாழ்விடமாகின்றது. தீவின் ஒரு முக்கிய அம்சம் ஒரிட வாழ்விகள். ஸ்ரீ லங்காவில் இலங்கை காட்டுக்கோழி, இலங்கை சாம்பல் இருவாச்சி போன்ற ஓரிட வாழ்வி பறவைகள் 34 இருப்பதை ஆசிரியர் பட்டியலிடுகின்றார். நான் வில்பட்டு சரணாலயம் சென்ற போது இந்த பறவைகளில் சிலவற்றை பார்த்தது நினைவிலிருக்கின்றது. –
-தியடோர் பாஸ்கரன்
Reviews
There are no reviews yet.