திரு வே. பார்த்திபன் எழுதியுள்ள கல்லாகிப் போனவர்கள் என்னும் நூல் நடுகற்கள் ஓர் அறிமுகம் என்பதில் தொடங்கி, பெருங்கற்கால பண்பாட்டில் நடுகற்கள், சங்ககால நடுகற்கள், கோட்டுருவ நடுகற்கள், விலங்கினங்களுக்கு எழுப்பப்பட்ட நடுகற்கள், சதியேற்ற நடுகற்கள், தூங்குதலை நடுகற்கள், ஏறுதழுவல் நடுகற்கள், சில முக்கியமான நடுகற்கள் ஆகிய தலைப்புகள் உள்ளிட்ட 18 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.
நூலாசிரியரின் களப்பணிகளும், அவர் தருகின்ற இலக்கியம் உள்ளிட்ட பிற சான்றுகளும், ஒப்புநோக்கு முறையும் பல அரிய செய்திகளைத் தருவதை நூலில் முழுமையாகக் காணமுடிகிறது.
தலைப்புகளைப் பிரித்து உரிய ஒளிப்படங்களை ஆங்காங்கே இணைத்து விளக்கங்களைத் தெளிவாகத் தந்துள்ள விதம் போற்றத்தக்கது.
தமிழ்நாடு மட்டுமன்றி அதற்கப்பாலும் உள்ள சான்றுகளைத் தரும்போது நூலாசிரியரின் பரந்துபட்ட வாசிப்பை உணரமுடிகிறது.
Reviews
There are no reviews yet.