தொல்மாந்தர்கள் தாங்கள் வாழ்ந்த குகைகளில் தீட்டி வைத்துள்ள ஓவியங்களைத்தான் பாறை ஓவியம் அல்லது குகை ஓவியம் என்கிறோம்.
போர்க்காட்சிகள், தங்களின் இருப்பைப் பதிவு செய்த கை ஓவியங்கள், கொண்டாட்டங்கள், அன்றாடச் செயல்பாடுகள், வானியல் குறியீடுகள் போன்ற பல சுவையான காட்சிகளை உள்ளடக்கிய இவ்வோவியங்கள் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற முதன்மைப் பதிவாகும்.
பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியில்தான் இத்தகைய ஓவியங்களின் இருப்பு உலகிற்குத் தெரியவந்தது.
1980 க்கும் பிறகே இவை தமிழகத்திலும் உள்ளன என்று நமக்குத் தெரிந்தது.
இவ்வோவியங்களைக் காண நாம் தொடர்ந்துப் பயணித்து வருகிறோம்.
அவற்றின் ஒரு பகுதியை பயணங்களின் வாயிலாகவே வழங்கியுள்ளோம்.
Reviews
There are no reviews yet.