சுரங்க நகரம் என்ற நூலைப் பற்றி
தமிழகத்தின் முன்னணி பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் குறித்து அதன் பல்லாரியிரக்கணக்கான பணியாளர்களிளோ, பயனாளிகளிளோ ஒருவர் கூட குறிப்பிடத்தக்க பதிவுகளை இதுவரை எழுதாத பின்னணியில் எழுதப்பட்ட திரு மு.நடேசன் அவர்களின் இந்தப் பதிவு மனதைத் தொடும் அளவில் நிறைவாக வந்துள்ளது.
நிறுவனத்தை பற்றியும் அதைச் சார்ந்துள்ள தொழிலாளர்களையும், அதிகாரிகளையும், அவர் பணியாற்றிய இடங்களில் நடைபெற்ற சிறு சிறு நிகழ்வுகள் பற்றியும் மிக எளிய மொழியில் சுவைபட பதிவு செய்துள்ளார்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தோற்றத்திற்கு ஜவாஹர்லால் நேரு, காமராஜர் போன்ற தலைவர்கள் காரணம் என்றாலும் கூட நிறுவனத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்கு
மும்மூர்த்திகளான கருதப்பட வேண்டிய ஜம்புலிங்க முதலியார்,
நிறுவன அதிபர்களாக எவ்வளவோ பேர் வந்திருந்தாலும் நிறுவனத்தின் வளர்ச்சி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட நிறுவனத்தின் முதல் அதிபர் திரு டி.எம்.எஸ்.மணி,
நிறுவனத்தை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கான வழி வகைகளை கண்டறிந்து செயல்படுத்திய திரு எஸ்.யக்னேஸ்வரன் ஆகியோர்
பற்றிய பதிவு மு.நடேசன் அவர்களின் நுணுக்கமான புரிதலுக்கு ஒரு சிறந்த எடுத்தக்காட்டு.
பணி ஒய்வு பெற்ற 25 ஆண்டுகளுக்கு பிறகு தனது 84ஆவது வயதில் தனது முதல் புத்தகத்தை எழுத்து எழுதி இருக்கும் திரு.மு.நடேசன் பாராட்டுக்குரியவர்.
-வேர்கள் மு.இராமலிங்கம்
Reviews
There are no reviews yet.