தமிழரின் தாவர வழக்காறுகள்

தமிழரின் தாவர வழக்காறுகள்

தமிழரின் தாவர வழக்காறுகள்

தமிழரின் தாவர வழக்காறுகள்

210.00

In stock
#3 Best Seller in Enviro Politics Tamil Books

210.00

தமிழரின் தாவர வழக்காறுகள் நூல் நம் பாரம்பரியாதை அறிந்து கொள்ள சிறந்த நூல ஆகும்.
Publisher:
Author:

Description

தமிழரின் தாவர வழக்காறுகள் – ஆ.சிவசுப்பிரமணியன்

மனித வாழ்வில் தாவரங்கள் உணவு, உடை, இருப்பிடம் என அடிப்படைத் தேவைகளிலிருந்து பயணம், மருத்துவம் போன்றவைகளுக்கும் ஆதாரமாக அமைகின்றன.

ஆ.சிவசுப்பிரமணியனின் தமிழரின் தாவர வழக்காறுகள் என்ற இந்நூலில் மொத்தம் 11 கட்டுரைகள் உள்ளன. அதில் 6 கட்டுரைகள் மிகச் சிறிய அளவிலும், 4 கட்டுரைகள் விரிவான அளவிலும், தமிழர் வரலாற்றில் தாவர எண்ணெய் என்ற கட்டுரை ஒரு சிறு நூலாக வெளியிடும் வண்ணம் பெரிய கட்டுரையாகவும் உள்ளன.

தமிழரின் தாவர வழக்காறுகள் நூலின் சிறப்பு குறித்து முன்னுரையாக தாவரவியல் பேராசியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரை மிக முக்கியமான ஒன்று. அதில், இந்நூல் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவனின் பண்பாட்டு அசைவுகள் கட்டுரைத் தொகுப்புபோல தாவரங்களின் பொருள்சார் பண்பாட்டு ஆய்வாகத் திகழ்கிறது எனப் பாராட்டுகிறார்.

இந்நூலிலுள்ள கட்டுரைகளின் வாயிலாக மனிதர்களுக்கும் தாவரங்களுக்குமான உறவை நாம் அறிந்து கொள்ளலாம்.

நொச்சி என்ற தாவரம் ஆவிபிடிக்க பயன்படும். பூச்சி வராமல் தடுப்பதற்காக நொச்சி இலைகளைக் களஞ்சியங்களில் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன்.

மயிலின் காலடித்தடங்கள் நொச்சியிலை போலிருக்கும் என முதலாம் வகுப்பு பாடநூலில் படித்திருக்கிறேன். அரிட்டாபட்டிக்கு பசுமைநடையாகச் சென்றபோது மயிலின் காலடித்தடங்களைக் கண்டு அது நொச்சியிலை போலிருக்கிறது என உடன்வந்த சகோதரர் சொன்னது நினைவிற்கு வருகிறது.

தமிழரின் தாவர வழக்காறுகள்
தமிழரின் தாவர வழக்காறுகள்

இந்நூலின் வாயிலாக நொச்சியின் பக்கக்கிளைகளைக் கொண்டு பஞ்சாரம் என கோழியை அடைப்பதற்கான கூடை செய்வதை அறிந்துகொண்டேன். நான் சிறுவயதாக இருந்தபோது பஞ்சாரம், பஞ்சாரம் என விற்றுக்கொண்டு வந்தவர்களைப் பார்த்திருக்கிறேன்.

மேலும், தேவராட்டம் எனும் நாட்டார்கலையில் உறுமி இசைப்பதற்கு நொச்சியின் குச்சி இடப்பக்கத்திலும், வலப்பக்கத்தில் ஆவாரையின் குச்சியும் பயன்படுகிறது. ‘ஆடு பயிர் காட்டும், ஆவாரை நெல் காட்டும்’ என்ற பழமொழிக்கான காரணத்தை அறிந்தபோது ஆச்சர்யம் ஏற்பட்டது. அதை நீங்களும் அறிந்துகொள்ள இந்த நூலைவாங்கி வாசியுங்கள். மேலும், செருப்புத் தைப்பதற்கு ஆவாரை எதற்கு உதவுகிறது என்ற தகவலும் புதிதாக உங்களுக்குக் கிடைக்கும்.

மஞ்சனத்தி மருத்துவ பயன்மிக்கது. புளிப்புச் சுவையும், அதன் மணமும் கடந்துவிட்டால் மஞ்சணத்திப் பழத்தைச் சுவைக்கலாம். ஒருமுறை சமணமலையில் அதை சாப்பிட்டு பார்த்தபின் அடுத்தமுறை முயற்சிக்கவில்லை. மஞ்சனத்தி கட்டை மாட்டு வண்டியில் பயன்படுகிறது.

சீமைக்கருவேல மரத்திற்கு மாற்றாக இதை வளர்க்கலாம். சங்ககாலத்தில் தலைவன் தான் காதலித்த பெண்ணை விரும்பி அடைய செல்லும்போது எருக்கம்பூவை சூடிக் கொள்வானென்று சொல்கிறது.  பின்னாளில் தஞ்சையில் மராத்தியர் மற்றும் நவாபின் ஆட்சிக்காலங்களில் தண்டனையின் போது எருக்கம்பூ மாலையை அணிவித்து ஊர்வலமாக கூட்டிவருவர் என்பதும் நாம் அறியாத தகவல். வெள்ளெருக்கு வேரில் விநாயகர் செய்து வழிபட்டால் நல்லது என்ற கருத்தும் நிலவுகிறது.

ஆமணக்கு எண்ணெய் விளக்கு எரிக்க சமண, பௌத்தர்களால் அறிமுகம் செய்யப்பட்டதாக அயோத்திதாசர் கூறுகிறார். உறுதியான முடிவெடுக்க முடியாமல் திணறுபவர்களை விளக்கெண்ணெய் திட்டுவார்கள். சிறுவயதில் எள்ளுப் புண்ணாக்கு மாட்டுக்கு உணவாக வாங்கிச் செல்வதை பார்த்திருக்கிறேன். எள் இறப்பு சடங்குகளோடு தொடர்புடையதால் இதை வீட்டில் வளர்க்கும் பழக்கம் இல்லை என்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன்.

தமிழரின் தாவர வழக்காறுகள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல ஆகும்.

விவசாயம் தொடர்பான நூல்கள் 

Reviews

There are no reviews yet.


Be the first to review “தமிழரின் தாவர வழக்காறுகள்”

Ragu from Viluppuram bought this item recently.
This item is Best Seller in following categories:
has been added to your cart:
Checkout