நொய்யல் இன்று: பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம் என்ற நூலைப் பற்றிய குறிப்பு
கொங்கு மண்டலத்தை காலங்காலமாக வளமிக்க பூமியாக வைத்திருக்கும் இயற்கைக்கு இன்று நடந்துவரும் துரோகத்தின் உண்மைக்கதையே இந்தப் புத்தகம்.
சிந்து சமவெளி நாகரீகத்திற்கு இணையாகப் பேசப்படும் தொன்மை மிகுந்த நொய்யல் இந்த நவீன யுகத்தில் குத்திக் கூறுபோடப்பட்டு, குதறப்பட்டுக் கிடக்கிறது.
கோவை என்றாலே குளுமை, அதன் கொஞ்சும் மொழியும்தான் எவருக்கும் நினைவிற்கு வரும்.
அதற்கு வித்திட்டதே நொய்யல் ஆறுதான்.
இந்த ஆற்றிலிருந்து வழிந்தோடி நிரம்பி வந்த பல குளங்களைக் காணோம்.
சில அணைகள் அழிந்தே விட்டன.
புதிதாக உருவான ஒரத்துப்பாளையம் அணையோ முழுக்க, சாயக்கழிவுநீரை தேக்கி, பாற்கடல் ஒன்று விஷமானது போல் ஆகி, பாசன நிலங்களை எல்லாம் நஞ்சாக்கி விட்டது.
வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு.
குளங்களை பட்டா போடுவதும் கூடவே நடந்து கொண்டிருக்கிறது.
நொய்யல் ஆற்றை சிலர் தங்கள் சுயநலத்துக்காக சாகடித்த பெருங்கொடுமையை அணு, அணுவாக விவரிக்கிறது இந்நூல்.
Reviews
There are no reviews yet.