வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 2

-17%

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 2

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 2

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 2

600.00 500.00

In stock

600.00 500.00

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் காட்டின் முழுமையாக நமக்கு உணர்த்துகிறது..
Publisher:
Author:

Description

“வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்” புத்தகம் பற்றிய விமர்சனம்

பெ.சிவசுப்ரமணியம் “வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்” நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இதனைப் படிக்கும் போது, வீரப்பன் வரலாற்றை நூலாகக் கொண்டு வர, நூலாசிரியர் சிவசுப்பிரமணியம் எடுத்த முயற்சிகள் தெரிகிறது. சுமார் 1000 பேரை இதற்காக சந்தித்து உரையாடி உள்ளார். அந்த வனம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து திரிந்து உள்ளார். நம்மையும் கூட அவரோடு பயணிக்க வைக்கிறார். வீரப்பன் வரலாற்றில் தொடர்புடைய பல மனிதர்களின் அரிய புகைப்படங்கள், சம்பவங்கள் நடந்த இடங்கள் எனத் தேடிச் சேர்த்துள்ளார்.

வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை உயிர் துடிப்பான நடையில் கொண்டு செல்வதில் வெற்றி கண்டுள்ளார். நூலைக் கையில் எடுத்தவர் எவரும், படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாத விறுவிறுப்பான நடை, உட்கரு. அற்புதமான புனைவு இலக்கியவாதிகள், மிகச் சிறந்த துப்பறியும் கதாசிரியர்கள் என யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத உள்ளடக்கம். திருப்பங்கள்…

சம்பவங்கள்… இவை திகிலூட்டுகிறது. மனதை படபடக்க செய்கிறது. இதயத்தை வலிக்கச் செய்கிறது. கண்ணீரையும் வர வரவழைக்கிறது. பலவிதமான எண்ணங்களை உருவாக்குகிறது. அந்தக் காட்டை விட்டு வெளியே வர மனம் மறுக்கிறது.

வீரப்பன் வரலாற்றின் முதல் பகுதி, நமக்கு என்ன சொல்கிறது? மேட்டூர் அணை கட்ட அங்கிருந்து வெளியேற்றப்பட்ட வீரப்பன் உள்ளிட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைத்திருந்தால் இந்த அவலச் சுவை மிகுந்த வரலாறு உருவாகாமல் தடுக்கப் பட்டிருக்குமோ?

வனத்தில் வாழும் மக்களுக்கு, அவர் தம் வயிற்றுப் பாட்டிற்கு உத்தரவாதம் உறுதி செய்யப்பட்டிருந்தால் மதிப்பிடவே முடியாத யானைத் தந்தம், சந்தன மரங்கள் உள்ளிட்ட செல்வங்கள் கொள்ளை போனது தடுக்கப் பட்டிருக்குமோ? வனத்தையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய துறைகளின் ஊழியர்கள், அத்தி பூத்தது போல வெகு சிலரே அத்துறையின் நோக்கங்களுக்கு ஏற்றவர்களாக இருக்கிறார்கள். அது தான் இந்த அவலத்திற்கு காரணமா?

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 2
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 2

தமிழக கர்நாடக அதிரடிப்படையில் பி. ஸ்ரீ நிவாஸ், சிதம்பரம் போன்று விரல் விட்டு எண்ணும் அளவிலான ஊழியர்களே காட்டின் உண்மையான காவலர்களாக உள்ளனர்.

உயிரைப் பணயம் வைத்து உயிர் கோளத்தின் ஒரு பகுதியை பாதுகாக்க துடித்து உள்ளனர். உயிரைப் பணயம் வைக்க தயாராக உள்ளனர். எல்லோரும் இவ்விருவராக இருந்திருந்தால் வீரப்பன் எப்போதே பிடிபட்டு இருப்பானே! அல்லது உருவாகாமல் கூட தடுக்கப் பட்டிருக்குமோ? அப்படி இல்லாமல் பெரும்பாலானவர்கள் அரசுத் துறைகளில் அதன் அடிப்படை இலக்குகளுக்கு எதிராக இருப்பது எதனால்?

அரசியல்வாதிகள் ஆக்கமும் ஊக்கமும் இல்லாமல் இருந்தால் இத்தகைய செயல்கள் நடைபெறுவது கட்டுப்படுத்தப்பட்டு இருக்கலாமோ? இவை எல்லாம் தாண்டி பணம் பணம் பணம் என்ற படத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பொருளாதார சூழல் தான் காரணமா? என்ற கேள்விகளை இந்த புத்தகம் வீரப்பன் வாழ்க்கை வழியாக ஆழமாக எழுப்புகிறது.

வீரப்பனுக்கு பிந்தைய வனம், வன வளம், விலங்குகள் எப்படி இருக்கிறது? வீரப்பன் மரணத்திற்கு பிறகு வனத்திற்குள் உருவாகியிருக்கும் இராட்சத பண்ணைகள், ஆழ்துளை கிணறுகள், வெட்டப்பட்ட மரங்கள், அங்குள்ள பணப் பயிர்கள் உறிஞ்சி குடிக்கும் நீர், ரிசார்ட்டுகள், உயர்ந்து நிற்கும் நிலத்தின் மதிப்பு இவை எல்லாம் எந்தவிதமான பாதிப்புகளை வனத்தின் மீது உருவாக்க இருக்கிறது? என்று நினைத்து பார்க்க கூட யாருக்கும் இப்போது நேரமில்லை. அப்போது வீரப்பன் ஒருவரே இப்போது?

வயிற்றுப் பாட்டுக்காக, வீரப்பனுக்கு உதவி செய்த ஒரு சில வன மக்கள், பழங்குடிகள் ஆகியோருக்காக ஒட்டு மொத்த வன மக்களின் வாழ்க்கை முறையே மாறிப்போகும் வேலையை தமிழக கர்நாடக வனத்துறை காவல் துறையினர் செய்து விட்டனர். அம்மக்களின் சமூக பொருளாதார பண்பாட்டு வாழ்வில் செயல்முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வனத்தை எப்படியெல்லாம் பாதிக்கும்! இதைப் பற்றிய கணிப்புகள் யாரிடம் உள்ளது? இந்த கேள்விகளையும் சேர்த்தே தான் இந்தப் புத்தகம் எழுப்புகிறது.

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 1 

Reviews

There are no reviews yet.


Be the first to review “வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 2”

has been added to your cart:
Checkout