வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 3

-8%

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 3

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 3

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 3

275.00

In stock

275.00

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் காட்டின் முழுமையாக நமக்கு உணர்த்துகிறது..
Publisher:
Author:

Description

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 3 குறித்து விளக்கங்கள் 

வீரப்பன் ஓர் காவிய நாயகன் போன்ற ஓர் பிம்பத்தை கட்டி எழுப்பும் முயற்சியும் நடைபெறுகிறது. அது வீரப்பன் உயிரோடு இருக்கும் போதே தொடங்கி ஆட்டம். அதற்கும் இந்த நூலில் பதில் இருக்கிறது.

யானைத் தந்த வேட்டை, சந்தனக் கட்டை கடத்தல், காடுகள் அழிப்பு ஆகியவற்றை பாதுகாக்க புறப்பட்ட கதாநாயகன் பி. ஸ்ரீ நிவாஸ், அவனது தோழர்கள் சிதம்பரம் போன்றோர் ஆட்டத்தின் துவக்கத்திலியே மிக மிக கொடூரமான முறையில் வில்லன் வீரப்பனால் கொலை செய்யப்பட்டு விடுகிறார்கள்.

கதாநாயகனாக இருந்துதிருக்க வேண்டிய வனத்துறை, சில தனிநபர்களை கதாநாயகன் வேடம் புனைய வைக்கிறது. இதை அறிந்து கொண்ட வில்லன், கதாநாயகர்களை துவக்கத்திலேயே துவம்சம் செய்து விடுகிறான். வீரப்பன் வரலாறு வழியாக வனத்துறை கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம் இது.

வீரப்பனாலும், அதற்கு முன்பும் பின்பும் அழிக்கப்பட்ட வனத்தை சரியாக மதிப்பீடு செய்யவும் இல்லை. வீரப்பனின் இதிகாசத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவும் இல்லை என்றே தோன்றுகிறது.

வீரப்பன் வரலாற்றின் வழியாக, காடுகள், சந்தன மரங்கள் எப்படி வெட்டிச் சாய்க்கப்பட்டது? எப்படி யானைகள் வானம் இடறும் படி துடிதுடித்து செத்தன?

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 3
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 3

ஒரு நாள் வயிற்றுப் பாட்டுக்கு ‌நான்கு நாட்கள் ஆறு கிலோ எடை கொண்ட மூங்கில்களை தூக்கித் திரிந்தனர்? அந்த மக்களை இரக்கமில்லாமல் மோகனையா தினேஷ் வகையராக்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்று குவித்தார்கள் என்று மட்டும் சொல்லவில்லை? இனி வரும் காலங்களில் இந்த வனத்தை எப்படி பாதுகாப்பது என்ற விடைகளும் இந்தப் புத்தகத்தில் புதையுண்டு கிடக்கிறது. ஒரு ஆரோக்கியமான சமூகம், அதனைத் தேடிப் படித்து, ஆற அமர யோசித்து விடைகளை தேடத் தயாராக வேண்டும்.

நிலக்கரியோ பெட்ரோலோ ஒரு முறை தோண்டி எடுத்துவிட்டால் திரும்பவும் உற்பத்தி செய்ய இயலாது. ஆனால் வனம் உயிர்த்தெழும் ஆற்றல் படைத்தது. ஆனால், அதற்கு ஒரு காலமும் இடைவெளியும் இருக்கிறது.

அந்த கால இடைவெளியில் இந்தப் பணிகளை செய்து முடிக்கப் போகிறோமா ? என்ற கேள்வியையும் பெரு மூச்சையும், சிவசுப்பிரமணியம் அவர்களின் ” வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்” பகுதி ஒன்று ஒருசேர எழுப்புகிறது. அத்தோடு, மீதமுள்ள வீரப்பனின் வாழ்வு, அது நிகழ்த்திய பயங்கரம்.

வீரப்பன் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரம், அவனால் வீழ்ந்து பட்ட மக்கள், செத்து மடிந்த சந்தன மரங்கள்… என்று தெரிந்து கொள்ள சிவா அவர்களின் அடுத்த பகுதிக்காக படபடப்போடு மனம் காத்துக் கிடக்கிறது.

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 2 

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 1 

Reviews

There are no reviews yet.


Be the first to review “வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம் 3”

has been added to your cart:
Checkout