வட தமிழ்நாட்டு இருளர் வாழ்வியலும் அவர்களின் மரபுசார் அறிவும் நூலைப் பற்றிய குறிப்பு
பழங்குடி சமூகங்கள் அவர்களின் சிறந்துபட்ட வாழ்க்கை முறை, வட்டார தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுடனான இணக்கமான உறவால் அடையாளம் காணப்படுகின்றனர்.
ஆனால் இந்த வளமான அறிவும் இயற்கைசார் திறன்களும் உலகமயமாக்கப்பட்ட, அதிகரித்து வரும் ஒருமைபடுத்தப்பட்ட உலகில் மிக விரைவாக அழிந்து வருகின்றன.
தமிழகத்தின் அடையாளப் பழங்குடியாக வாழும் இருளர்கள் அவர்களுடைய பாம்பு மற்றும் எலி பிடிதிறன்களுக்காக வட மாவட்டங்களில் நன்கு அறியப்பட்டவர்கள்.
அவர்களின் மரபுவழி அறிவுக்கு மற்றொரு பக்கம் உள்ளது.
இது வட்டார சூழல் மண்டலம், தாவரங்கள், விலங்குகள் மற்றும் உயிரிமூலங்களின் நீள்நிலைப் பயன்பாட்டின் மூலம் வாழும் வாழ்க்கை பற்றிய ஆழமான புரிதல் ஆகும்.
மூலிகைகளின் மூலம் நோய்களை முழுமையாக குணப்படுத்துவது பற்றிய அவர்களின் மரபுவழி அறிவையும் நோய்கள், விஷக்கடி, உணவு மற்றும் மருத்துவத் தாவரங்கள் பற்றிய புரிதலையும் வட தமிழ்நாட்டு இருளர் வாழ்வியலும் அவர்களின் மரபுசார் அறிவும் எனும் இப்புத்தகம் விரிவாக விவரிக்கிறது.
அனுபவ மற்றும் வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் அவர்களின் பண்பாடு பற்றிய சில விவரங்களையும் இப்புத்தகம் வழங்குகிறது.
நவீன முன்னேற்றத்தால் கொண்டுவரப்பட்ட தவிர்க்க முடியாத மாற்றங்களை ஏற்பது மற்றும் அவர்களின் உயிரி – பண்பாட்டு பாரம்பரிய இழப்பு ஆகியன பல பழங்குடி சமூகங்களை இக்கட்டான சூழலில் தள்ளியுள்ளன.
இத்தகைய அறிவார்ந்த பழங்குடி சமூகத்தினர் இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கையை மதிப்பதோடு மட்டுமில்லாமல் அவ்வாழ்வின் மதிப்பீடுகளைக் கற்றுக்கொள்ளலும் போற்றுதலும் முக்கியமானதாகும்.





Reviews
There are no reviews yet.