எறும்புகளின் வரிசை கலைகிறது என்ற நூலைப் பற்றி
மனிதன் கத்தரித்துப்போட்ட விரல் நகத்தை தானியமென்று கருதி உடல் வலிக்கத் தூக்கிப்போகும் அந்த எறும்பை நினைத்தால் நகைப்பாகயிருக்கிறது!
எறும்புகளின் அறியாமை கண்டு இரங்குகிறேன் நண்பா!
உனது இரங்கும் பண்பைப் பார்த்தால் எறும்புகள் நகைக்கும்.
மனிதன் ஒரு அவசரக்குடுக்கை.
வெட்டப்பட்ட நகத்தை உண்ணும் நோக்கத்துடன் எந்த எறும்புகளும் எடுத்துச்செல்லவில்லை!
எறும்புகளின் நுகர்வுத்திறன் கத்தரிக்கப்பட்ட நகத்தில் படிந்துள்ள உணவுத் துகளாலும் நகத்தில் படிந்துள்ள தோலின் மணத்தாலும் ஈர்க்கப்பட்டே, எறும்பு நகத்தைத் தூக்கிப்போகிறது.
நகத்தை எறும்புகள் உண்பதில்லை!
புற்றின் மண்ணடியில் போட்டு வைத்தால், அதில் ஒரு வகை பூஞ்சை பிடிக்கும்.
நகம் வேறொரு பொருளாக மாறி நமக்கு உணவாகும் என்ற தொலைநோக்குப் பார்வை எறும்புகளுக்கு உண்டு!




Reviews
There are no reviews yet.