பல்லுயிர் போற்றுவோம் நூலைப் பற்றிய குறிப்பு
சூழலியல் சார்ந்த நூல்கள் தமிழில் அரிதாகவே வெளியாகின்றன.
இந்தத் தளத்தில் ஆழ்ந்த பரிச்சயம் உள்ளவர்கள் யாரும் தமிழில் எழுதுவதில்லை.
முனைவர் ச.சாண்டில்யன் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரைத் தொகுப்பை இந்தப் பின்புலத்தில்தான் நான் வரவேற்கின்றேன்.
பல ஆண்டுகள் இந்தத்துறையில் ஈடுபாட்டுடன் பணியாற்றியதின் அடிப்படையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
பல்லுயிரியம் எனும் கருதுகோள்தான் நூலின் குவிமையம் என்றாலும் அதன் வெவ்வேறு பரிமாணங்களையும் ஆசிரியர் ‘பல்லுயிர் போற்றுவோம்’ எனும் இப்புத்தகத்தில் தொட்டுச்செல்கின்றார்.
பூமியிலுள்ள எல்லா ஜீவராசிகளும் ஒன்றை ஒன்று சார்ந்து ஒரே உயிரி போல இயங்குகின்றது என்பது இந்தக் கட்டுரைகளின் சாரமாக உள்ளது.
எளிமையுடனும் தகுந்த ஆதாரங்களுடனும் இன்றைய சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளைப் பற்றிய ஒரு அருமையான அறிமுகத்தை இந்த நூல் தருவதோடு பருவநிலை மாற்றம் பற்றியும் பேசுகின்றது.
இந்தப் பொருளைப் பற்றி தமிழ் எழுதுவார் வெகு குறைவு.
அறிவியல் தமிழை ஆசிரியர் அருமையாகப் பயன்படுத்தியிருக்கின்றார்!
ஐம்பதுகளில் இயங்கிய பெ. நா. அப்புசாமியின் எழுத்துக்கள் போல அறிவியல் தமிழ் மிகவும் எளிமையாகத் தரப்படுகின்றது.
தாவரங்கள், உயிரினங்கள், பூச்சிகள் என சகல ஜீவராசிகளைப் பற்றி எழுதுகின்றார்.
எனவேதான், பல்லுயிரியம் போற்றுவோம் போன்ற நூல்களின் வரவு வரவேற்கத்தக்க ஒன்றாகின்றது.
தமிழ் பசுமை இலக்கியத்தில் இதன் தோற்றம் முக்கியமானது.




Reviews
There are no reviews yet.